Published : 05 Oct 2023 06:59 PM
Last Updated : 05 Oct 2023 06:59 PM

தெறிக்கும் வசனங்கள்... மிரட்டும் ஆக்‌ஷன்... லோகேஷ் - விஜய்யின் 'லியோ' ட்ரெய்லர் எப்படி?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22-ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் மற்றொரு பாடலான 'Badass' வெளியானது. படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து படக்குழுவிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ஆக்‌ஷன் காட்சிகளைவிட ட்ரெய்லரின் ஆரம்பம் முதல் இறுதி வரை வசனங்களே அதிகம். அதிலும் விஜய் பேசும் வசனங்களே அதிகம். இதில் கெட்ட வார்த்தைகளும் அடக்கம். 2.43 நிமிடம் ஓடும் ட்ரெய்லரில் போலீஸ் - கிரிமினல் கதை, ஃப்ளாஷ்பேக் காட்சிகள் என கவனிக்க வைக்கின்றன. விஜய்க்கான ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கவல்லவை. மேலும், விஜய் தொடங்கி மிஷ்கின் வரை மிரட்டல் லுக்கில் காட்சியளிக்கின்றனர். முழுக்க முழுக்க காஷ்மீரின் அழகு கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடனும், பரபரக்கும் அனிருத்தின் இசையுடனும் ட்ரெய்லர் கவனம் ஈர்க்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x