Published : 04 Dec 2017 05:08 PM
Last Updated : 04 Dec 2017 05:08 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஆர்கே நகரில் விஷால்- வெற்றி போதையா, வீரச் செயலா?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுகிறார். அவரது அறிவிப்பு, தமிழக அரசியலிலும், தேர்தல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விஷால் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

விஷ்வா விஸ்வநாத்

மதுசூதனன், ஜெயக்குமார்னு அந்தத் தொகுதியோட சொந்தக்காரர்கள், தமிழக அரசு, காவல்துறை, அதிகாரிகள், இரட்டை இலைன்னு வலிமையான எடப்பாடி அணி ஒரு பக்கம். அதற்கடுத்த வலிமையான நிலையில் சேகர்பாபு உள்ளிட்டோரைக் கொண்ட திமுக இன்னொரு பக்கம். மதுசூதனன் தரப்புக்கு எதிரான அதிமுக ஓட்டுகள் டிடிவிக்குப் போகுமே தவிர வேறு எங்கும் போக வாய்ப்பில்லை. கட்சி ரீதியா டிடிவி அங்கே ஓட்டுகளை பிரிப்பார்.

இப்படி இருக்க திடீர்னு விஷாலைப் பார்த்த உடனே எம்எல்ஏ ஆக்கும் அளவுக்கு ஆர்.கே.நகர்ல மக்கள் அப்பிராணிகளா இருக்க மாட்டாங்க. இது சினிமா இல்ல. லாஜிக்கலா சிந்திக்கனும்.

Ezhilan M

வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற விஷால் மீது தமிழக அரசு பதிய வாய்ப்புள்ள வழக்குகள்...

● அங்கீகரிக்கப்பட்ட அளவை விட கூட்டம் சேர்த்தது

● தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது.

● அனுமதி பெறாமல் வாகனத்தில் ஊர்வலம் சென்றது.

- பத்த வைப்போம்!

Udhai Kumar

சுயேட்சை வேட்பாளரான விஷால் எதுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்துக்குப்போய் மரியாதை செய்துவிட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போகணும்? அட சிவாஜி மணிமண்டபத்துக்கு போய் மரியாதை செலுத்திருந்தாக்கூட ஒரு லாஜிக் இருக்குன்னு சொல்லாம்..

//இப்படி மரியாதை செலுத்தியதால், அதிமுக தொண்டர்கள் இவருக்கு ஓட்டு போட்டு அந்த தொகுதியில் ஜெயிக்க வைப்பாங்கன்னு நினைக்கறாரா?//

 

Bhuvaneshwari Velmurugan

கோடம்பாக்கம் ஏரியா மாதிரி ஆர்.கே.நகர நினைச்சுட்டார் போல... ரத்த பூமில காத்து வாங்க ஆசைப்படுறார்.

D S Gauthaman

ரஜினி, கமல், அஜீத், விஜய், விஷால் வரை

வருங்கால முதல்வர்களுக்கு

ஒன்றும் குறைச்சலில்லை

எங்கள் திரையுலகில்;

நடப்பதென்னவோ

அன்புச்செழியன்களின் கவர்னர் ஆட்சியே...

Mahalingam Ponnusamy

நடிகர் விஷால் கிருஷ்ணாவின் அரசியல் பயணம். ராமாவரத்தில் தொடங்கி, ஆர்.கே நகர் நோக்கி...

Bala G

விஷால் காரு போன்றோர் தமிழர்களின் உளவியலை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும்; கொஞ்சம் சேவை செய்வதுபோல் அள்ளிவிட வேண்டும்; அப்புறம் அரசியல்.

வாங்க விஷால்.. உங்களை மட்டும் தமிழர்கள் நாங்கள் ஏமாத்திருவோமா என்ன..?

Pichaikaaran Sgl

ரஜினியோ, கமலோ அரசியலுக்கு வருவதைவிட விஷால் வருவதே நல்லது.

ரஹீம் கஸாலி

ஜெ சமாதிக்குப் போனதன் மூலம் அதிமுகவினரின் வாக்குகளைக் குறி வைத்துதான் விஷால் ஆர்.கே.நகரில் இறங்குகிறார் என்பது தெளிவாகிறது. #விஷால்த்துவம்.

வம்புப் பட்டு

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் தந்த வெற்றி போதை...

Saathaga Paravai Jai Ganesan

அரசியலுக்கு மட்டுமல்ல கலைத்துறைக்கும் குட்பை சொல்ல துணிந்திருக்கிறார் விஷால்!

Stalin SP @Stalin_Tweets

வேட்புமனு தாக்கல் செய்ய பைக்கில் வந்த விஷால்- சினிமால போட்ற சீனெல்லாம் தேர்தல் களத்துலயும் செய்றாப்ல.

மணவை. சீ.பொ.சீ @sakthivasan3331

’மாற்றம் தேவை என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’ என்று சொல்லி கொண்டே கொஞ்சம் கூட மாறாம, எம்.ஜி.ஆர் / ஜெ. சமாதியில வணங்கி நாமினேஷன் தாக்கல் செய்யக் கிளம்பிட்டார் நடிகர் விஷால்.

சபாஷ் நல்ல மாற்றம்.

Vijaya Sarathy Rao

இவ்வளவு சிறு வயதிலே, நேரடியாக களம் இறங்குகிறார்… நல்ல தைரியம். ஆழம் தெரியாமல் காலை விடும் வெகுளி அல்ல இவர். நடிகர் சங்க தேர்தலிலே சத்தமில்லாமல் காய்களை நகர்த்தினார். என்ன காரணத்திற்காக களமிறங்குகிறார் என்றே தெரியவில்லை… சர்ப்ரைஸ் மூவ்.

Sivasankar Pavai

இவரின் நடவடிக்கைக்குப் பின்னால் ஏதோ கட்சி இருக்கிறது என்று நினைக்கிறேன். யாருடைய ஓட்டுகளை இவர் பிரிக்கப் போகிறார்?

Sundari Ramesh Babu

முதலில் தைரியமாகக் களமிறங்கியதற்கே வாழ்த்துச் சொல்வோம். புலி வருது புலி வருதுன்னு பூச்சி காட்டாமல் நேரடியாகப் போட்டிக்கு வந்துவிட்டார். துணிந்தவனுக்கு துக்கமில்லை, அழுதவனுக்கு வெட்கமில்லை. ஒரு மாற்றம் வரட்டும். வாழ்த்துக்கள்.

ஆல்தோட்டபூபதி @thoatta

விஷால் விஜய்யாக முயற்சித்து பார்த்தாரு, முடியாதுன்னு இப்ப விஜயகாந்த் ஆகிட்டாரு.

பிரகாஷ் @PrakashMahadev

விஷால் கேட்கிற சின்னம் - விசில்

தயாரிப்பு கம்பெனி பெயர் - விஷால் பிலிம் பேக்டரி

ஆப் பெயர்- வீ ஷல் (V Shall App)

#எல்லாத்துலயும் விஷால்

செல்வமணி @Selvatwitz

ஆ.ர்.கே.நகரில் திமுக, அதிமுக வெற்றி கண்டால் மக்கள் இன்னும் அடிமைத்தனமாக வாழ ஆசைப்படுகிறார்கள்..

விஷால் வெற்றிபெற்றால் சினிமா மோகம் மக்களிடமிருந்து விலகவில்லையென்றே அர்த்தம்.

அனிதா @anithatalks

பில்டப் பண்றோமோ, பீலா உடறோமோ இந்த உலகம் நம்மள உத்துப் பார்த்துட்டே இருக்கணும் - விஷால் அலப்பறைகள்.

கிரியேட்டிவ் @CreativeTwitz

'சண்டக்கோழி' சந்தைக்கு வந்துருச்சி, சண்டை போடுதா இல்ல குழம்புக்கு போகுதானு பார்ப்போம்.

சிற்பன் @SKtwtz

எல்லா தேர்தலிலும் போட்டியிடுறேன்னு இப்படியே போய், அடுத்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்கூட நம்ம விஷால் போட்டி போடுவார் போல..

நாடுஎங்கசார் போகுது? @Piramachari

விஷால் என்ன ஆர்கே நகரிலா குடியிருக்கிறார்? பிறகு எதற்கு போட்டியிட வேண்டும்?- எஸ்.வி.சேகர்

ஆமா ஜெயலலிதா வீடு மட்டும் ஆர்.கே. நகரிலும், ஆண்டிப்பட்டிலயுமா இருந்துச்சு?

எனக்கொரு டவுட்டு @Thaadikkaran

இதோ வர்றேன், நாளைக்கு வர்றேன்னு சொன்னவங்க முன்னாடி உண்மையாகவே விஷால் "ஆம்பள" தான்..!

சிதறல்கள் @mujib989898

வந்ததும் அரசியல் பிரபலங்களால் விமர்சனத்திற்குள்ளானதே அவரின் முதல் வெற்றி..

BUSHINDIA @BUSHINDIA

வயது 40, காமராஜ்,மோடி, யோகி வழியில் தனிமை, பேச்சுலர் வாழ்க்கையில் இருக்கும் விஷால் , நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து , தனது அரசியல் பயணத்தில் பிரகாசிப்பாரா?

வணங்காமுடி @itz_katti

'வருவேன்' - வார்த்தையைத் தாண்டாத ரஜினி... ட்விட்டரைத் தாண்டாத கமல்... இவர்களை வேடிக்கை பார்க்கவிட்டுக் களத்தில் குதித்த விஷால் வீரனே...

Ashok Senthilkumar

திரையைத் தவிர்த்து நிஜத்திலும் அரசியலில் உள் நுழைய நினைக்கும் தைரியம் கொஞ்சம் யோசிக்க வைக்கத்தான் செய்கிறது, சீனியர்கள் காலம் தாழ்த்துவதன் உள்நோக்கம் பற்றி அறிந்து கொண்டுள்ளாரா என்று தெரியவில்லை!

'பாயும்புலி' போல் 'கத்திசண்டை' போடாமல் 'சமர்' (போர்) புரிய வாழ்த்துக்கள்! தமிழன் எவரெனினும் வரவேற்பான், தகுதியின் தரத்தைப் பொறுத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x