Published : 01 Dec 2017 12:42 PM
Last Updated : 01 Dec 2017 12:42 PM
'AAA' படப்பிடிப்பில் சிம்பு நடந்து கொண்ட விதம் குறித்து படக்குழுவினர் 4 பக்க அறிக்கை வடிவில் முழு விபரத்தையும் அளித்திருக்கிறது
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். மேலும், சிம்புவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். (மைக்கேல் ராயப்பன் புகாரை முழுமையாக தெரிந்து கொள்ள). தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் குற்றச்சாட்டுக்கு சிம்புவும் பதில் அளித்திருக்கிறார்.(அதை முழுமையாக தெரிந்து கொள்ள)
இந்நிலையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து, தங்களுடைய நிலையை விளக்கினார். அச்சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு 'நன்றாக வாழ்ந்து, வீழ்ந்த தயாரிப்பாளரின் கண்ணீர் கதை' என்ற தலைப்பில் 4 பக்கத்திற்கு அறிக்கை கொடுத்தார்கள். அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:
சினிமா மீது எனக்கிருந்த ஆசையால், லட்சியத்தால், வெறியால் கடந்த 9 வருடங்களில் 12 படங்களை தயாரித்துள்ளேன். பல படங்கள் சுமாராக ஓடினாலும், வருடத்திற்கு நம்மால் 500 தொழிலாளிகளுக்காவது வேலை தர முடிகிறதே என்ற ஆத்ம திருப்தியிலும், எப்படியும் வெற்றியை அடைந்தே தீருவேன் என்ற வெறியிலும் படத்தயாரிப்பை தொடர்ந்து கொண்டு வந்தேன்.
ஆனால், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் என்னை படுபாதாளத்திற்கு கொண்டு சொல்லும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இயக்குநர் ஆதிக்கிடம் கதையை கேட்டு, அவருக்கு இக்கதையில் மூன்று கதாபாத்திரங்கள் என்று தெரிந்த பிறகு தான் என்னிடம் இயக்குநரை அனுப்பி வைத்தார். இந்த கதை திண்டுகல்லில் ஆரம்பித்து, துபாய், சென்னை கடைசியில் காசியில் முடியும் என்பது அவருக்க்கு தெரியும்.
இந்தப் படம் தொடர்பாப பலதரப்பட்ட யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதன் உண்மை நிலையை உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஏப்ரல் 9,2016: அலுவலக பூஜை
மே மாத இறுதியில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்பு தொடங்க திட்டம். திரையுலகில் இருக்கும் எந்த கதாநாயகியும் சிம்புவுடன் நடிக்க தயாராக இல்லை. த்ரிஷா நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பி தந்துவிட்டார். லட்சுமி மேனனை கொச்சினில் சந்தித்தும் மறுத்துவிட்டார். கடையில் ஸ்ரேயா ஒப்புக் கொண்டார்.
படப்பிடிப்புக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் போது, சிம்பு ஒவ்வொரு லொக்கேசனையும் மாற்றிக் கொண்டிருந்தார். மதுரையில் ரொம்ப வெயில் இருக்கும், மைசூர்-ல போய் பாருங்க என்றார். பார்த்தோம், கோவா என்றால் கொச்சின் என்றார். பார்த்தோம் மாதங்கள் கடந்தது. கடைசியில் திண்டுக்கல் நாங்களே முடிவு செய்தோம், வரமாட்டேன் என்றார். ஸ்டார் ஓட்டல் இல்லை என்றால். PUBLIC PLACE-ல் நடிக்க வரமாட்டேன் என்றார். கூட்டம் அதிகமாக இருந்தால் படபிடிப்பை நிறுத்திவிடுவேன் என்றார். ஞாயிற்றுக்கிழமை வரமாட்டேன் என்றார். இதையெல்லாம் மீறி மூன்று மாதங்களுக்கு பிறகு ஜூலை 9,2016 திண்டுக்கல் படப்பிடிப்பு ஆரம்பித்தது.
படப்பிடிப்பு தேதியை அவரே தேர்வு செய்வார். அவரே கால்ஷீட் நேரத்தையும் தேர்வு செய்வார். ஆனால், அவர் சொன்ன கால்ஷீட் நேரத்தில் ஒரு நாளும் வந்தது இல்லை. வரவும் மாட்டார். அவர் ஒரு நாள், எத்தனை மணி நேரம் நடித்தார்? எவ்வளவு நாட்கள் வந்தார்? என்பது தனி அட்டவணை. ஒவ்வொரு நாளும், படப்பிடிப்பு முடிந்த காட்சிகளை ரூம்-ல் பார்த்துவிடுவார்.
கபாலி திரைப்படம் பார்க்க ஒரு நாள் படப்பிடிப்பை நிறுத்தினார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு அதே கெட்டப்பில் பாடல் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில், ஸ்ரேயா சரியில்லை. அதனால் அவரை நீக்கிவிட்டு திரும்பவும் படப்பிடிப்பு நடத்தலாம் என்றார். அதனால் அவருடன் எடுக்கவிருந்த பாடல் காட்சி கடைசிவரை எடுக்கவே முடியவில்லை.(அவர் ஸ்ரேயாவுடன் மீண்டும் நடிக்க விரும்பாத காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்)
2-ம் கட்ட படப்பிடிப்புக்கு (அதே கெட்டப்பில்) துபாய் செல்ல திட்டமிட்டோம். துபாய் வெயில் அதிகமாக இருக்கும் என்றார். லண்டன் என்றார். கால தாமதம் செய்தார்.
இரண்டு மாத போராட்டத்துக்கு பிறகு, சரி என்றார். பிறகு 90 கிலோ உடம்பை குறைத்துவிட்டு படப்பிடிப்பு நடத்தலாம் என்றார். எதுவும் செய்யவில்லை. நாங்கள் வேறு வழியின்றி அதே உடம்புடன் அஸ்வின் தாத்தா லுக்கில் மூன்றாவது கதாபாத்திரம் சென்னையில் எடுக்க திட்டமிட்டோம். PROSTHETIC MAKEUP அளவு எல்லாம் எடுத்த பின்னர் மேக்கப் போட மூன்று மணி நேரமாகும் என்பதை தெரிந்து கொண்டு மேக்கப் எல்லாம் போட மாட்டேன். வேண்டுமென்றால் முகத்தை மட்டும் CG-ல் மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். இப்படி பல வழிகளில் கொடுத்த தொல்லைகளை தாங்கிக் கொண்டு படப்பிடிப்பு தொடங்க அவர் கொடுத்த தேதிகளில் கூட அவர் வரவில்லை. பல நாட்கள் அவரால் படப்பிடிப்பு நின்றது. எப்படியாவது படத்தை தள்ளி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்.
மாயாஜால் படப்பிடிப்பு நடக்கும் போது, கூட ஈசிஆரில் ரூம் போட்டு தங்கினார். அதன் கணக்கு விவரங்களை EP-சுப்பு (இராம.நாராயணன்) கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை படத்திலிருந்து நீக்கினால் தான் சூட்டிங் வருவேன் என்று அடம் பிடித்தார். அதன்படி அவர் மாற்றப்பட்டார்.
இவரால் தமன்னா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் ஏன் 80 வயது நீலு வரை பாதிக்கப்பட்டவர்களே அதிகம். ECR, EVP தூரம் என்பார். (ஆனால் இவர் வீட்டிலேயே நடந்த சூட்டிங்கிற்கே அதிகாலை 3:00 மணிக்கு தான் வந்தார்); ஒரு வழியாக சென்னை படப்பிடிப்பு முடிந்த பின்னர் மூன்றவாது கட்ட படப்பிடிப்பு தயார் என்ற நிலையில் மூன்று மாதம் உடம்பை குறைத்துவிட்டு வருகிறேன் என்றார். சரி பாடலாவது எடுக்கலாம் என்று முடிவு செய்த பிறகு மும்பையில் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு செட் ஓர்க் ஆரம்பிக்கும் போது படப்பிடிப்பை நிறுத்தினார்.
3வது படப்பிடிப்புக்கு எப்படியோ சம்மதிக்க வைத்த பின்னர் துபாய் வேண்டாம் என்றார். மலேசியா வேண்டாம் என்றார். சிங்கப்பூர் போலாம் என்றார்.
கடையில் தாய்லாந்தை சிங்கப்பூராக மாற்ற முடிவு செய்து லொக்கேசன் பார்த்த பிறகு, அவருக்கு நாயகியாக பூஜா குமார், நீது சந்திரா, சனா கான் ஆகியோரை மாற்றிக் கொண்டே இருப்பார். படப்பிடிப்பு குழுவினர் தாய்லாந்து செல்வதற்கு முன்னர் அவரது உதவியாளர்கள், 10 நாட்களுக்கு முன்னரே தாய்லாந்து சென்று ஜாலியாக இருந்தனர் என்னுடைய காசில் படப்பிடிப்பு குழுவினர் தாய்லாந்து சென்ற பிறகு சிம்பு இன்னும் கிளம்பாமல் இருக்கிறாரே என்று பதற்றத்துடன் அவர் வீட்டுக்கு சென்று கேட்ட போது, என்னிடம் "சார் படம் நன்றாக வந்திருக்கிறது. இதை இரண்டு பாகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். நானே சம்பளம் வாங்காமல் இரண்டு பாகம் நடித்து தருகிறேன். ஒத்துக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இன்னும் படம் ஒன்றரை வருடம் ஆகும்" என்றார். சரி என்றால் ரம்ஜானில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றார். போராடி பார்த்தேன் முடியவில்லை. அவர் இனிமேல் வரவே கூடாது என்ற மனநிலையில் இருந்தார். இயக்குநரிடம் பேசி தாய்லாந்து படப்பிடிப்பு குழுவினரை திரும்ப சென்னை அழைத்தேன்.
எப்படியாவது படத்தை ஜுன் 23-ல் திரையிட முடிவு செய்து இயக்குநரை ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஒரு பாடலுடன் வெளியிட முடியாது. அதனால் இன்னொரு பாடலை சேர்க்க முடிவு செய்தோம். பாடல் தயாராகவில்லை. (5 பாடல்கள் ஒப்பந்தம் போட்ட நிலையில் ஒன்றரை வருடங்களாக யுவன் ஒரு பாடல் மட்டுமே போட்டிருந்தார். இதற்கு யார் காரணம் என்பது யுவன் மற்றும் சிம்பு மட்டுமே அறிவர். சிம்புவே பாடல் எழுதுவது, பாடுவது அனைத்து ரெக்கார்ட்டிங் முடிந்த பிறகே எனக்கு தெரியும். இயக்குநருக்கும் பாடல் பதிவு நடப்பதை தெரிவிக்க அவர்கள் விரும்பவில்லை)
கடைசியாக மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லை, வரவில்லை. ஒரு வழியாக இயக்குநர் கதறி அழுது ஒரு மணி நேரம் தாருங்கள். 8 ஷாட் தான் என்று கேட்ட பின்னர் என் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதன்படி எடுத்தோம். ஆனால் இவர் வீட்டிலேயே நடந்த படப்பிடிப்பிற்கே அதிகாலை 3 மணிக்கு தான் வந்தார். (இந்த அநியாயம் எங்காவது நடக்குமா?)
சரி படப்பிடிப்புக்கு தான் வரவில்லை. டப்பிங்கு வருவார் என்று நினைத்தோம். அதற்கும் வரவில்லை, வெளியில் வரமாட்டேன் என்றார். ரிலீஸ் தேதி நெருங்கி விட்டபடியால் அவர் வீட்டிலேயே (பாத்ரூம்) டப்பிங் பேசினார். (அவர் பேசிய சம்பளம் வாங்கவில்லை என்றால் எப்படி டப்பிங் பேசி இருப்பார்?) அதை எடுத்துக் கொண்டு 4 ப்ரேம்ஸ் ராஜாகிருஷ்ணனிடம் காட்சிய பிறகு இவ்வளவு மோசமான குரல் பதிவை என்னால் மிக்ஸ் செய்ய முடியாது. தயவு செய்து வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். இன்னும் 5 நாட்களில் தணிக்கை பார்த்து ஆக வேண்டும் என்ற நிலையில் 75000 ரூபாய் செலவில் VOICE MODULATION SOFTWARE வாங்கிக் கொடுத்து ஓரளவிற்கு சரி செய்தோம்.
இப்படி பல வழிகளில் சிம்புவினால் ஏற்பட்ட இடைஞ்சல்கள், தொல்லைகள் ஆகியவற்றால் படம் இப்படி குளறுபடியாக வெளிவந்தது. சிம்புவின் போட்டியாளர்கள், எதிரிகள், பத்திரிகை ஊடகங்களில் அவர் அளித்த பேட்டிகள், அவருக்கு பிடிக்காத ரசிகர்கள் அவர்களின் விமர்சனத்தால் நானும் இந்தப் படமும் பெரிதும் பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்தது.
தமன்னாவிடம் 30 நாட்கள் கால்ஷீட் வாங்கி, 13 நாட்கள் மட்டுமே எடுத்தோம். அதே போல் ஸ்ரேயாவிடம் 15 நாட்கள் கால்ஷீட் வாங்கி 7 நாட்கள் மட்டுமே எடுத்தோம். அனைத்தும் வீண்
மொத்த சூட்டிங் நாட்கள் திட்டமிட்டது - 75
சூட்டிங் நடந்தது - 47+1
சிம்பு வந்தது - 38
பாடல் + சண்டை - 13
சிம்பு வந்தது - 25
எனக்கு ஏற்பட்ட இந்த கதி வேறு எந்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஏற்படாமல் காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT