Published : 09 Dec 2017 08:03 PM
Last Updated : 09 Dec 2017 08:03 PM
'2.0' படத்தின் தாமதத்திற்கு நிஜக்காரணம் என்ன? - படக்குழு தகவல்
அமெரிக்காவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர '2.0' படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
ஜனவரி வெளியீடாக இருந்த இப்படம் தற்போது ஏப்ரல் வெளியீடாக மாறியுள்ளது. இதற்கு படத்தின் கிராபிக்ஸ் தாமதம் தான் காரணம் என தகவல்கள் வெளியாகின. உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து படக்குழுவினர் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம் '2.0' படத்தின் பிரதான காட்சிகள் கிராபிக்ஸை கொடுத்திருந்தோம். இதற்கான 90% பணமும் அளித்திருந்தோம். ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை. மேலும், அவர்கள் அளித்த பணிகளைப் பார்த்தபோது சுமார் 50% பணிகளைத்தான் முடித்திருந்தார்கள். இதனால் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
தற்போது அவர்களுக்கு அளித்த காட்சிகளை, 100 ஷாட்களாகப் பிரித்து சுமார் 10 நிறுவனங்களுக்கு அளித்து மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் மட்டுமே தாமதம். இரவு-பகல் பாராது அனைவருமே ஏப்ரல் வெளியீட்டுக்கு உழைத்து வரும் சூழல் தற்போது ஏற்பட்டுவிட்டது.
தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்து, அமெரிக்க நிறுவனம் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டதாகவே கருதுகிறோம். பல்வேறு ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்து, ஆஸ்கர் விருது வாங்கிய ஒரு நிறுவனம் இப்படி செய்யும் என நினைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT