Published : 06 Dec 2017 08:26 PM
Last Updated : 06 Dec 2017 08:26 PM
ஆர்.கே.நகரில் நேற்றிரவு நடந்தது பரிதாபகரமான சம்பவம் என்று விஷால் மனு நிராகரிப்பு குறித்து ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார் விஷால். முதலில் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது, பின்னர் ஏற்கப்பட்டு பிறகு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இந்த குளறுபடியால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை என்றாலும் கூட ஆர்.கே.நகரில் நேற்றிரவு நடந்தது பரிதாபகரமான சம்பவம். தேர்தல் ஆணையம் அப்பழுக்கற்றதாக இருக்க வேண்டும். அது ஒரு சுதந்திரமான அமைப்பு என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட வேண்டும். பல்வேறு ஊடகங்களும் பொத்தாம் பொதுவாக பல செய்திகளை வெளியிட்டுவருவது சரியானது அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT