Last Updated : 06 Dec, 2017 03:17 PM

 

Published : 06 Dec 2017 03:17 PM
Last Updated : 06 Dec 2017 03:17 PM

குடும்ப எதிர்ப்பை மீறி காதலனைக் கரம்பிடித்தார் வி.ஜே.மணிமேகலை

 தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர் ஹுசைனை பதிவுத் திருமணம் செய்து கொண்டார் மணிமேகலை.

சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மணிமேகலை. ஹுசைன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, இன்று (டிசம்பர் 6) பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது திடீர் பதிவு திருமணம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் மணிமேகலை கூறியிருப்பதாவது:

நானும் ஹுசைனும் இன்று திருமணம் செய்து கொண்டோம். இது ஓர் அதிரடி பதிவுத் திருமணம். என் திருமண விஷயத்தில் என் தந்தையை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லாம், என் கை மீறிச் சென்றதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒருநாள் என் தந்தை என்னைப் புரிந்து கொள்வார் என நான் நம்புகிறேன். காதலுக்கு மதமே இல்லை. லவ் யு ஹுசைன். ஸ்ரீராமஜெயம், அல்லா.

இவ்வாறு மணிமேகலை தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x