Published : 13 Sep 2023 05:53 PM
Last Updated : 13 Sep 2023 05:53 PM
ஹைதராபாத்: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது குறித்து நாரா லோகேஷிடம் ரஜினிகாந்த் பேசியுள்ளதாக வெளியான தகவலின்படி, முதலில் நாரா லோகேஷின் நலம் விசாரித்துள்ளார். தொடர்ந்து “தைரியமாக இருங்கள். என்னுடைய நண்பர் (சந்திரபாபு நாயுடு) எந்தத் தவறையும் செய்திருக்கமாட்டார். அவர் செய்த நலத்திட்ட உதவிகளும், வளர்ச்சி திட்டங்களும் சட்டவிரோத கைதிலிருந்து அவரை பாதுகாக்கும். 24 மணிநேரமும் மக்களுக்காக பாடுபட்ட அவரின் உழைப்பும், அர்பணிப்பும் ஒருபோதும் வீண்போகாது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையோ, அவர் மீதான குற்றச்சாட்டோ எந்த வகையிலும் சந்திரபாபு நாயுடுவின் புகழுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் தன்னலமற்ற பொதுச் சேவையால் அவர் விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்” என ரஜினி நம்பிக்கை தெரிவித்துள்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திராவில் நடந்த ‘என்டிஆர் நூற்றாண்டு’ நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சந்திரபாபு நாயுடுவை புகழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடயே, பாதுகாப்பு கருதி வீட்டுக் காவலில் வைக்க கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் போடப்பட்ட மனுவை விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. | வாசிக்க > சந்திரபாபு நாயுடு கைது விவகாரம்: வீட்டுக்காவல் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT