Published : 05 Dec 2017 02:32 PM
Last Updated : 05 Dec 2017 02:32 PM
என்னை பொறுத்தவரை புதுமுகமாக இருந்தாலும் கதை தான் முக்கியம் என்று ரம்யா நம்பீசன் தெரிவித்திருக்கிறார்.
ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், ஆனந்த்ராஜ், சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சத்யா'. சைமன் கிங் இசையமைப்பாளராகவும், அருண்மணி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள். சத்யராஜ் தயாரித்திருக்கிறார்.
'சத்யா' குறித்து ரம்யா நம்பீசன் பேசியிருப்பதாவது:
நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே நம்புவேன். 'சத்யா' படத்தைப் பொறுத்தவரை என் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்வேதா. ’சத்யா’ தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஷனம்' ரீமேக்காகும்.
மற்ற மொழிகளில் நடிப்பதனால் தமிழில் கொஞ்சம் இடைவெளி விழுந்துவிட்டது. தற்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். 'சத்யா' படத்தைத் தொடர்ந்து 'நட்புனா என்னன்னு தெரியுமா' படம் வெளியாகவுள்ளது. என்னைப் பொறுத்தவரை புதுமுகமாக இருந்தாலும் கதை தான் முக்கியம்.
'சேதுபதி' படத்தில் அம்மாவாகவும், 'ஒருநாள் ஒருகனவு' படத்தில் ஸ்ரீகாந்த் தங்கையாகவும் நடித்திருக்கிறேன். அதன் பின் 'ராமன் தேடிய சீதை', 'குள்ள நரி கூட்டம்' போன்ற படங்களில் நாயகியாக நடித்தேன். தங்கையாக நடித்தால் கடைசி வரை தங்கையாகத் தான் நடிக்க வேண்டி இருக்கும் என்றார்கள். அதை உடைக்கவே நாயகியானேன்.
இவ்வாறு ரம்யா நம்பீசன் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT