Published : 04 Dec 2017 12:32 PM
Last Updated : 04 Dec 2017 12:32 PM
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் ஜனவரியில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.
'டிமான்ட்டி காலனி' படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்து வருகிறார். இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 'நானும் ரவுடிதான்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் இதுவாகும்.
ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தி ஜனவரியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவற்றை திட்டமிட இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT