Published : 05 Dec 2017 05:31 PM
Last Updated : 05 Dec 2017 05:31 PM
ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் நடிக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் மட்டுமே வெளியாகின. ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தினாலும், தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு தகவலையும் வெளியிடாமலேயே இருந்தது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில், தற்போது இப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. "விஜய்யின் 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது" என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் மற்றும் கலை இயக்குநராக சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ தகவலை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT