Published : 04 Sep 2023 05:44 AM
Last Updated : 04 Sep 2023 05:44 AM

பாரீஸில் உருவாகும் ‘லிட்டில் ஜாஃப்னா’ படத்தில் வேல ராமமூர்த்தி

சென்னை: எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி பாரீஸ் நகரத்தில் உருவாகும் ‘லிட்டில் ஜாஃப்னா’ (குட்டி யாழ்ப்பாணம்) என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் அங்கு செல்ல இருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:

இப்போது ‘ஜென்டில்மேன் 2’, அர்ஜுன் இயக்கும் படம் உட்பட பல்வேறு படங்களில் நடித்து வருகிறேன். வெப் தொடர்களிலும் நடிக்கிறேன். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புகளில் புதிது புதிதான கதாபாத்திரங்களுடன் வாழ்வது பிடித்திருக்கிறது. என்னையே நான் மாற்றிப் பார்த்துக்கொள்வது போல இருக்கிறது. இந்நிலையில் பாரீஸில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழர்கள் உருவாக்கும் படம் ஒன்றில் நடிக்கிறேன். படத்துக்கு ‘லிட்டில் ஜாஃப்னா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ‘ஐயா’ என்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். லாரன்ஸ் என்பவர் இயக்குகிறார். பாரீஸ் தமிழர்கள் நடிக்கிறார்கள். இதற்காக வரும் 20-ம் தேதி அங்கு செல்ல இருக்கிறேன். அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

இவ்வாறு வேல ராமமூர்த்தி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x