Last Updated : 12 Dec, 2017 07:02 PM

 

Published : 12 Dec 2017 07:02 PM
Last Updated : 12 Dec 2017 07:02 PM

அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமா? - கவுண்டமணி மறுப்பு

அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக வெளியான செய்திக்கு கவுண்டமனி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஆர்.கே.நகர் தேர்தல் களம் பெரும் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருந்து வருகிறார். கவுண்டமனியும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு கவுண்டமணி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், "ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. அந்த செய்தி உண்மையல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன்.

நான் எந்தக் கட்சியையும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. என்னை கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x