Published : 18 Dec 2017 01:00 PM
Last Updated : 18 Dec 2017 01:00 PM
பணப்பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதால், டிசம்பர் 29-ம் தேதி 'உள்குத்து' வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
'திருடன் போலீஸ்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் தினேஷ் நடிக்க 'உள்குத்து' படத்தைத் தொடங்கினார் கார்த்திக் ராஜு. நந்திதா, திலீப் சுப்பராயன், பால சரவணன் உள்ளிட்ட பலர் தினேஷுடன் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து தணிக்கையும் முடிந்துவிட்டது. ஆனால், இப்படத்தை தயாரித்த செல்வகுமாருக்கு பணத் தட்டுப்பாடு பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் விட்டலுக்கு முழுப்படத்தையும் கொடுத்துவிட்டார்.
விட்டல் கைக்கு மாறினாலும், பல்வேறு பணப்பிரச்சினைகளால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 29-ம் தேதி 'உள்குத்து' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT