Published : 08 Dec 2017 05:48 PM
Last Updated : 08 Dec 2017 05:48 PM
15-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில், தமிழ்ப் படங்கள் போட்டி பிரிவில் 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 21 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இந்தாண்டின் சிறந்த படத்திற்கான தமிழ்ப் படங்கள் போட்டி பிரிவில் 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. '8 தோட்டாக்கள்', 'அறம்', 'கடுகு', 'குரங்கு பொம்மை', 'மாநகரம்', 'மகளிர் மட்டும்', 'மனுசங்கடா', 'ஒரு கிடாரியின் கருணை மனு', 'ஒரு குப்பை கதை', 'தரமணி', 'துப்பறிவாளன்’ மற்றும் 'விக்ரம் வேதா' ஆகியவை தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.
மேலும், இந்தாண்டு இந்தியன் பனோரமா படங்கள் திரையிடல் பிரிவில் Newton(Hindi), Railway Children(Kannada), Village Rockstars (Assamese), Take Off (Malayalam), Bisorjon (Bengali), Redu (Marathi), Idak(Marathi), Khyanikaa (Oriya), Juze (Konkani) மற்றும் Paper (kannada) ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளது.
சிறப்பு திரையிடலாக 'என் மகன் மகிழ்வன்' (My Son is Gay) படம் திரையிடப்படுகிறது. இதன் துவக்கவிழா டிசம்பர் 14-ம் தேதி மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT