Published : 21 Dec 2017 06:49 PM
Last Updated : 21 Dec 2017 06:49 PM
2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பது குறித்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் சம்பந்தப்பட்ட '2ஜி வழக்கு' தீர்ப்பு இந்தியாவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. இன்று (டிசம்பர் 21) காலை 11:00 மணியளவில் வெளியான தீர்ப்பில் அனைவருமே விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பு குறித்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தீர்ப்பு சரியெனில் இன்று வரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்று முதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம். இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப் பெருமக்களே! வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict
இவ்வாறு பிரசன்னா தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT