Published : 26 Dec 2017 07:54 PM
Last Updated : 26 Dec 2017 07:54 PM
டான் சாண்டி இயக்கவுள்ள புதிய படத்தில் ஜீவாவுக்கு நாயகியாக ஷாலினி பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'கீ' மற்றும் 'கலகலப்பு 2' படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் ஜீவா. இதில் டான் சாண்டியின் கதை பிடித்துவிடவே நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.
இப்படத்தின் நாயகியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் '100% காதல்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா தயாரிக்கவுள்ளார். படத்தைப் பற்றி இயக்குநர் டான் சாண்டி பேசும்போது, "கொள்ளையடிப்பது சம்பந்தப்பட்ட காமெடி த்ரில்லர் கதையாகும். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இசையமைப்பாளராக சாம், எடிட்டராக ரூபன் பணிபுரியவுள்ளார்கள். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT