Published : 01 Dec 2017 03:55 PM
Last Updated : 01 Dec 2017 03:55 PM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட உள்ளதாக வெளியான தகவலுக்கு அவருடைய தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. டிசம்பர் 21-ம் தேதி வாக்குபதிவும், 24-ம் தேதி தேர்தல் முடிவும் வெளியாகவுள்ளது. ரஜினி மற்றும் கமல் இருவருமே அரசியலில் இறங்கவுள்ளதால், ஆர்.கே.நகர் தேர்தலில் இவர்களுடைய பங்களிப்பு என்பது சுத்தமாக இருக்காது என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக விஷால் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியது.
இது குறித்து விஷால் தரப்பில் விசாரித்த போது, "விஷாலிடம் சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான். ஆனால், போட்டியிடுவது குறித்து அவர் எந்தவொரு முடிவையுமே எடுக்கவில்லை. தற்போது 'இரும்புத்திரை' இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் கவனம் செலுத்தவிருக்கிறார்" என்று தெரிவித்தார்கள்.
மேலும், விஷாலுக்கு நீண்ட நாட்களாகவே தனிக்கட்சி தொடங்குவதற்கான ஆசையுள்ளது. ஆனால் தற்போது நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பல பணிகளுக்கு இடையே அரசியல் கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT