Published : 09 Dec 2017 08:02 PM
Last Updated : 09 Dec 2017 08:02 PM
'யு-டர்ன்' படத்தின் தமிழ் ரீமேக்கை பவண்குமாரே இயக்கவுள்ளார். சமந்தா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
கன்னடத்தில் பவண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் 'யு-டர்ன்' படத்திற்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
பவண்குமார் இயக்கத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனிடையே ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள். இதனை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மறுத்திருக்கிறார்.
இந்நிலையில், தற்போது 'யு-டர்ன்' இயக்குநர் பவண்குமாரே தமிழ் ரீமேக்கையும் இயக்கவுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்க, தயாரிப்பாளர் பவன் தயாரிக்கவுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT