Published : 23 Aug 2023 07:53 PM
Last Updated : 23 Aug 2023 07:53 PM
சென்னை: “நிலவில் இந்தியர்கள் கால் பதித்து நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “செயற்கைகோளின் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது தொடங்கி நிலவில் தரையிறங்கியது வரை என்ன ஒரு நெடும் பயணம்! இஸ்ரோ குழு இந்தியாவையே பெருமைபடுத்தியுள்ளது. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். நிலவில் இந்தியர்கள் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என பதிவிட்டுள்ளார்.
From carrying satellite parts on bicycles to landing on the moon - What a journey it has been! Team ISRO is the pride of the nation. A historic day which will forever be etched in our nation’s spacefaring odyssey. The day is not far when Indians will walk on the moon. @isro… pic.twitter.com/u24yQDvYj0
— Kamal Haasan (@ikamalhaasan) August 23, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT