Published : 19 Aug 2023 11:48 AM
Last Updated : 19 Aug 2023 11:48 AM

“நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது” - யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ ட்ரெய்லர் எப்படி?

“நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது” - யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ ட்ரெய்லர் எப்படி?

‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களின் வரிசையில் யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் ‘லக்கி மேன்’. பாலாஜி வேணுகோபால் இயக்கும் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இதில் யோகிபாபு உடன் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (ஆக. 19) வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையே பார்க்காத ஒரு மனிதனுக்கு பெரும் அதிர்ஷ்டம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பது ட்ரெய்லரில் சுருக்கமாக காட்டப்படுகிறது. ஏழ்மையான நிலையில் இருக்கும் யோகிபாபுவுக்கு ஒரு பெரிய வேலையின் மூலம் வசதிகள் கிடைக்கின்றன. கூடவே சில பிரச்சினைகளும் அவருக்கு முளைக்கின்றன. இதனால் அவர் குடும்பத்திலும், வெளியிலும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ட்ரெய்லரில் நமக்கு காட்டப்படுகிறது. ஷான் ரால்டனின் இசையில் பின்னணியில் வரும் பாடல் ஈர்க்கிறது. “நல்லவனா இருந்தா நல்லா இருக்க முடியாது”, ‘நமக்கு பிடிச்ச விஷயத்தைதான் இயற்கை முதல்ல நம்மகிட்டருந்து பறிக்கும்” போன்ற வசனங்கள் சிறப்பு. ’லக்கி மேன்’ ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x