Published : 08 Dec 2017 01:24 PM
Last Updated : 08 Dec 2017 01:24 PM
வசூல் குறித்த தகவல்களை ட்விட்டரில் பகிர்பவர்களை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. சனிக்கிழமை முதலே படத்தின் வசூல் இவ்வளவு என்பது குறித்த தகவல்கள் சமூகவலைத்தளத்தில் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வசூலும் பகிரப்பட்டு வந்தன. இதனை கடுமையாக சாடியுள்ளார் அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சில அரைவேக்காடு நபர்கள் உங்கள் படத்தைக் குறிப்பிட்டு தவறான தகவல்களைப் பகிர்வது எரிச்சலூட்டுகிறது. இதை சரிசெய்வதாக நினைத்து சில தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் நாம் வேதனைப்படுத்திவிடக்கூடாது. ரசிகர்களே.. உங்கள் ஹீரோவின் படம் நன்றாக இருந்தால் கொண்டாடிவிட்டுப் போங்கள். அதைவிடுத்து வசூல் குறித்து உங்களுக்கு என்ன அப்படி கவலை.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT