Last Updated : 17 Dec, 2017 03:21 PM

 

Published : 17 Dec 2017 03:21 PM
Last Updated : 17 Dec 2017 03:21 PM

நல்ல படம். ஆனால்? - அருவி குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம்

 அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'அருவி' படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இயக்குநர் பால்கி இயக்கியுள்ள இந்திப்படம் 'பேட்மேன்'. அக்‌ஷய்குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இதன் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. "தமிழர்கள் யாருமே தங்களுடைய கதைகளை இயக்குவதில்லை. இந்திப்பட இயக்குநருக்கு ஒரு தமிழரின் கதையைச் சொல்ல வேண்டும் என தெரிந்திருக்கிறது" என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

'பேட்மேன்' குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் "தமிழகத்தில் திறமையான இயக்குநர்கள் கிண்டல் செய்தும், மற்றவர்களின் வேலையை சிறுமைப்படுத்தியும், அவதூறுபடுத்தியும் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது, பாலிவுட்டில் நிஜ நாயகர்களைப் பற்றிய படங்கள் எடுக்கிறார்கள். நிஜ பேட்மேனை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், 'அருவி' படத்தின் பெரும்பாலான காட்சிகள் 'சொல்வதெல்லாம் உண்மை' போன்றதொரு நிகழ்ச்சியில் நடப்பது போன்று அமைத்திருப்பார் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன்.

'அருவி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், அப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் "பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்தப் படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிர்வினை கூற வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார். பெண்ணியப் படம் எடுத்திருந்தாலும், அடக்குமுறைக்கு, அநீதிக்கு ஆளான பெண்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கிண்டல் செய்துள்ளார்" என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x