Published : 09 Dec 2017 07:59 PM
Last Updated : 09 Dec 2017 07:59 PM
'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் மூவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிடப்பட்டது. முதல்முறையாக சுசீந்திரன் நடிக்கவிருப்பதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்.
இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கவுள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் ராம்மோகன் இப்படத்தைத் தயாரிக்கிறார். நாயகி, துணை கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறியிருப்பதாது:
விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுதே ஒரு திகிலான 'க்ரைம்' நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே இந்தக் கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து விறுவிறுப்போடு பார்க்கவைக்கும் கதை இது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT