Published : 27 Nov 2017 10:52 AM
Last Updated : 27 Nov 2017 10:52 AM
புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் பணியாற்றும் மென்பொறியாளர் ரகு தனது திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தவர், சாலை விபத்தில் சிக்கினார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் சமூகவலைத்தளத்தில் பெரிதாக விவாதிக்கப்பட்டது. பலரும் அரசியல் தலைவர்களை கடுமையாக சாடி வந்தனர். மேலும் ட்விட்டர் பக்கத்தில் #WhoKilledRagu என்ற ஹெஷ்டேக்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக Banner"ஜி"க்கள் உணரவேண்டும்
இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT