Published : 30 Nov 2017 05:42 PM
Last Updated : 30 Nov 2017 05:42 PM
உங்களை விரைவில் விரட்டுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் ட்வீட்டுக்கு தயாரிப்பாளர் சங்கம் பதிலடி கொடுத்துள்ளது.
எந்தவொரு புதிய படமொன்றாலும் உடனடியாக தங்களுடைய இணையத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். தங்களுடைய செயல்பாடுகளை அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் கூறிவருவார்கள்.
இன்று (நவம்பர் 30) தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் "தமிழ் திரை தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களது அனைத்து விளம்பர பிரச்சாரங்களையும் ரத்து செய்துள்ளது. காட்சிகளை ஓட்ட எங்களுக்கு நன்கொடை தேவைப்படுகிறது. உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள். நாங்கள் பேபால் கணக்கைத் தெரிவிக்கிறோம். எதுவே இந்த உலகத்தில் இலவசமாகக் கிடைப்பதில்லை" என்று தகவல் வெளியிடப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தின் ட்விட்டர் கணத்திலிருந்து தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு, "நாங்கள் உங்களை விரைவில் விரட்டுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், தமிழ் ராக்கர்ஸ் ட்வீட்டிற்கு பலரும் பதிலளிக்கவே, அதற்கு தயாரிப்பாளர் சங்கமும் தங்களுடைய பதில்களை வெளியிட்டு இருக்கிறது. அவற்றில் கூறியிருப்பதாவது, "விரைவில் அவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள். தமிழ் ராக்கர்ஸ் மரியாதையுடன் வெளியேறுவதற்கு இதுவே சிறந்த தருணம். இதுவொரு தொடக்கம் தான், அவர்களை அனைத்து இடங்களிலும் தடுக்கப் போவதை பார்க்கத்தான் போகிறீர்கள். தலைவா என்ற வார்த்தைக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். தமிழ் ராக்கர்ஸ் ஒரு பிச்சைக்காரன்” என்று தெரிவித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT