Published : 14 Aug 2023 05:50 PM
Last Updated : 14 Aug 2023 05:50 PM
திருவனந்தபுரம்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளிவந்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் பார்த்தார். பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளி வருகிறது இந்தத் திரைப்படம்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் வெளியாகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் வசூல் உலக அளவில் ரூ.300 கோடியை கடந்துள்ளதாக தகவல்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தை பார்க்க குடும்பத்துடன் திரையரங்கம் வந்திருந்தார் கேரள மாநில முதல் பினராயி விஜயன். அவர் நேற்று முன்தினம் இந்தப் படத்தை பார்த்ததாக தெரிகிறது. அவர் திரையரங்குக்கு வருகை தரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வலம் வந்தது.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் படத்தை பார்த்த பிறகு படத்தின் இயக்குநர் நெல்சனை பாராட்டி இருந்தார். அது குறித்து நெல்சன், எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருந்தார்.
Kerala CM Pinarayi Vijayan & Family at @_PVRCinemas Lulu to watch #Jailer pic.twitter.com/r2hJnGAcY2
— Southwood (@Southwoodoffl) August 12, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT