தனுஷ் | கோப்புப்படம்
தனுஷ் | கோப்புப்படம்

மீண்டும் ரிலீஸ் ஆகும் வேலையில்லா பட்டதாரி

Published on

தனுஷ் நடித்து 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘வேலையில்லா பட்டதாரி’. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இந்தப் படத்தில் அமலா பால், சுரபி, சரண்யா, சமுத்திரக்கனி, விவேக் உட்பட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். தமிழில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தெலுங்கில் ‘ரகுவரன் பி.டெக்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் இந்தப் படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரும் 18ம் தேதி மீண்டும் வெளியாகிறது. சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ படம் தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தனுஷின் இந்தப் படத்தையும் அங்கு மீண்டும் வெளியிடுகின்றனர்.

தனுஷ் ‘சார்’ (தமிழில் வாத்தி) படம் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் நடித்தார். அடுத்து சேகர் கம்முலா இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in