Last Updated : 23 Nov, 2017 09:49 AM

 

Published : 23 Nov 2017 09:49 AM
Last Updated : 23 Nov 2017 09:49 AM

அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது: கமல்

கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும் என்று கமல் தெரிவித்திருக்கிறார்.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக அசோக்குமார் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமாரின் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அசோக்குமார் தற்கொலை குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.

இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x