Published : 30 Nov 2017 02:56 PM
Last Updated : 30 Nov 2017 02:56 PM
அன்புச்செழியனுக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்று 'அண்ணாதுரை' பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்திருக்கிறார்.
ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாதுரை'. இன்று (நவம்பர் 30-ம் தேதி) வெளியாகியுள்ளதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அச்சந்திப்பில் அன்புச்செழியன் பற்றிய கேள்விகளுக்கு விஜய் ஆண்டனி பேசியதாவது:
ஒட்டுமொத்த உலகமும் ஒருவருக்கு எதிராக இருக்கும் போது, அதற்காக பயந்து நானும் போனால் சுயநலவாதி அல்லவா. அசோக்குமார் தற்கொலை உண்மையில் நடந்திருக்கக் கூடாது.
என் கண்ணில் நான் அப்படியொரு அன்புச்செழியனை பார்த்ததில்லை. வட்டிக்கு பணம் கொடுத்தார், கொடுத்துவிட்டேன். அவ்வளவு தான் அவருக்கும் எனக்குமான உறவு.
எந்த பக்கம் ஆதரவு நிறைய இருக்கிறதோ, அந்தப் பக்கம் போய் உட்கார்ந்திருக்கலாம். ஆனால், என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த அன்பு சார் என்பது வேறு.
நான் படம் தயாரிக்கப் போகிறேன் என்ற போது நம்பி பணம் கொடுத்தார். அந்த எண்ணத்தால் அவருக்காக நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த உலகமே அவருக்கு எதிராக நின்றாலும், அவர் என்னிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை.
அசோக்குமார் தற்கொலை கடிதத்தைப் படித்தேன். மிகவும் மனம் உடைந்து எழுதியிருக்கிறார். தற்போது அது குறித்து காவல்துறை விசாரணையில் இருப்பதால் பேசவிரும்பவில்லை.
இவ்வாறு விஜய் ஆண்டனி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT