Published : 07 Aug 2023 06:40 PM
Last Updated : 07 Aug 2023 06:40 PM
சென்னை: இம்மாதம் 10-ம் தேதி ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நாளை (ஆக.8) இமயமலை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் அவ்வப்போது இமயமலைக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ரஜினி இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி இமயமலைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment