Last Updated : 25 Nov, 2017 03:57 PM

 

Published : 25 Nov 2017 03:57 PM
Last Updated : 25 Nov 2017 03:57 PM

லேடி சூப்பர்ஸ்டார் என்ற சுமையை நயன்தாராவுக்கு தராதீர்கள்: லட்சுமி ராமகிருஷ்ணன்

லேடி சூப்பர்ஸ்டார் என்ற சுமையை நயன்தாராவுக்கு தராதீர்கள் என்று ட்விட்டர் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அறம்'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'அறம்' பார்த்தேன். அந்த கதாபாத்திரத்தில் நயன்தாராவை மிகவும் பிடித்தது. ஒளிப்பதிவும், இசையும் அட்டகாசம். நயன்தாரா சேலையில் அவ்வளவு அழகாக இருந்தார்.

ஒரு பார்வையாளரான எனக்கு 2 விஷயங்கள் படத்தில் பிடிக்கவில்லை. சகோதரன் கதாபாத்திரம்தான் படத்தின் உண்மையான நாயகன். ஆனால் அவனை படத்தின் முடிவில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அடுத்து, காப்பாற்றப்பட்ட பெண் குழந்தைக்கு முதலுதவிதான் தந்திருக்க வேண்டும். ஏன் முதலில் காலில் விழ வேண்டும்?.

ஊடக நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். லேடி சூப்பர்ஸ்டார் என்ற சுமையை நயன்தாராவுக்கு தராதீர்கள். அவரது திறமைகளை நாங்கள் பார்க்கவிடாமல் செய்யாதீர்கள். அவர் அந்த சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு பொருந்துவது போன்ற வேடங்களை தேர்ந்தெடுக்கும் நிர்பந்தம் வரலாம்.

’அறம்’ படத்தில் அவர் காலில் விழும் காட்சி பயமாக இருக்கிறது. தமிழகம் காலில் விழும் பழக்கத்திலிருந்து மீள வேண்டும். நமது பெற்றோரின் காலில் மட்டும்தான் நாம் விழ வேண்டும். காலில் விழுபவர்களைப் பார்த்தால் நான் பயந்து கத்திவிடுவேன். நமது மக்கள் மிக எளிமையாக இருப்பதால் அவர்களுக்கு இந்தப் பழக்கம் தானாக வந்துவிடுகிறது.''

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x