Published : 06 Aug 2023 05:22 PM
Last Updated : 06 Aug 2023 05:22 PM
சென்னை: நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம் ஆகியவற்றின் தொடக்கவிழா, விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. நண்பன் குழும நிறுவனர்ஜி கே,இந்தக் குழுமத்தின் இந்தியாவுக்கான விளம்பர தூதர், நடிகர் ஆரி அர்ஜுனன், நண்பன் குழும இணை நிறுவனர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நண்பன் என்டர்டெய்ன்மென்ட் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் நாசர் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, “நண்பனிசம்- விளக்கம் தேவையற்ற ஒரு தத்துவம். அந்தஎளிய உறவை, உணர்ச்சியை, உன்னதமான உணர்ச்சிகளாக்கி உலகம் முழுவதும்பரப்புகின்ற உங்களுக்கு நட்பைக் காணிக்கையாக்குகிறேன். நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்” என்றார்.
விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ராம், இயக்குநர்கள் சேரன், கே.பாக்யராஜ், வெற்றிமாறன், கலை இயக்குநர் டி. முத்துராஜ் ஆகியோருக்கு நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது வழங்கப்பட்டது. நண்பன் குழும இன்டர்நேஷனல் என்டர்டெயின்மென்ட் தலைவர் நரேன் ராமசாமி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி, செயலாளர் கதிரேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment