Published : 04 Nov 2017 08:39 PM
Last Updated : 04 Nov 2017 08:39 PM
கமல் குறித்து இந்து மகாசபா சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருப்பதை அரவிந்த்சாமி கடுமையாக சாடியிருக்கிறார்
சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு, தனது கருத்துகளை ட்விட்டரில் பகிர்ந்து வருபவர் அரவிந்த்சாமி.
இந்து மதம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் கமல். இதற்கு இந்து மகாசபா, கமலைப் பற்றிய சர்ச்சைக்குரிய வகையில் தனது கருத்துகளை தெரிவித்திருக்கிறது.
இதனை மேற்கோளிட்டு அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அவர் இதைத்தான் குறிப்பிடுகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. அவர்களது நம்பிக்கை எதுவாக இருந்தாலும், அதை பிரதிபலிப்பவர்களாக தீவிரவாதிகளை நாம் பார்க்கக் கூடாது. ஆனால், அவர்களது இருப்பை நாம் மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT