Published : 10 Nov 2017 02:19 PM
Last Updated : 10 Nov 2017 02:19 PM
மறைந்த அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்டத்துக்கு விஜய் சேதுபதி ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்
தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படமொன்றில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்காக வந்த பணத்தை மறைந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டத்துக்கு வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்தெடுத்து நடித்து வருகிறேன். இப்போது அணில் குழுமத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்திருக்கும் தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.
கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் விதம் 38,70,000 ரூபாயும், மேலும் தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோ பள்ளிகளுக்கு தலா 50,000 ரூபாய் வீதம் 5 லட்சம் ரூபாயும், தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா 50,000 ரூபாய் வீதம் 5,50,000 மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் ஹெலன் ஹெல்லர் என்கிற செவித்திறன் குறைந்தோர் பள்ளிக்கு 50000 ரூபாய் என மொத்தம் 49,70,000 ரூபாயை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்.
கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT