Published : 14 Nov 2017 06:52 PM
Last Updated : 14 Nov 2017 06:52 PM
ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கட்டியுள்ள 'ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்' இமயமலையில் திறக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் அவரின் நண்பர்கள் வி.எஸ்.ஹரி, வி.டி. மூர்த்தி, விஸ்வநாதன் (வழக்கறிஞர்), ஸ்ரீதர் ராவ், திலீபன் (டாக்டர்), வைத்தீஸ்வரன் (மும்பை) ஆகியோர் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் 'ஸ்ரீ பாபாஜி தியான நிலையம்' கட்டியுள்ளனர்.
இந்தத் தியான நிலையத்தை, மஹா ஸ்ரீ பாபாஜி தியானம் செய்யும் இடத்திற்குச் சென்று பூஜை செய்து பின்பு இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழாவை விமரிசையாக நடத்தியுள்ளனர்.
விரைவில் ஸ்ரீ பாபாஜி தியான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வருவுள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT