Published : 20 Nov 2017 09:27 PM
Last Updated : 20 Nov 2017 09:27 PM
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் படத்தை 12 பாடல்களோடு உருவாக்கவுள்ளது படக்குழு.
'கரு' படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் விஜய். ட்ரெண்ட் ஆர்ட்ஸ் ரவி தயாரித்து வரும் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் முடிந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க திட்டமிட்டு வருகிறார்கள்.
பிரபுதேவாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கருணாகரன் நடித்து வரும் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்கி வருகிறார்கள். முழுக்க நடனம் தொடர்பான படம் என்பதால் 12 பாடல்களைக் கொண்டு உருவாக்கவுள்ளார்கள். 'விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் இசையமைத்து வருகிறார். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, எடிட்டராக ஆண்டனி பணிபுரிந்து வருகிறார்கள்.
விஜய் படம் தவிர 'யங் மங் சங்', 'மெர்குரி', 'குலேபகாவலி' மற்றும் 'சார்லி சாப்ளின் 2' ஆகிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. தமிழில் அனைத்துப் படங்களையும் முடித்துவிட்டு சல்மான்கான் நடிக்கவுள்ள இந்திப் படத்தை இயக்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT