Published : 03 Nov 2017 05:01 PM
Last Updated : 03 Nov 2017 05:01 PM
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கிறது. நவம்பர் 17-ல் வெளியாகிறது.
'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.
ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்தார். கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்த இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் முடிந்து தணிக்கை பணிகளைத் தொடங்கியது படக்குழு.
இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் 'யு/ஏ' சான்றிதழ் அளிக்கவே, நவம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்துக்கு தயாராகி வருகிறார் கார்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT