Published : 01 Nov 2017 08:14 PM
Last Updated : 01 Nov 2017 08:14 PM

நாம் இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்?- விஷால் வேதனை

நாம் சென்னையை இது போன்ற பெருமழை, புயல், வெள்ளத்தை எதிர்கொள்ளும் நிலையில் வைத்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்? என்று நடிகர் விஷால் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக விஷால் தனது கம்பெனி ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''ஒவ்வொரு முறையும், இயற்கைப் பேரிடர் சமயங்களில் - அது பெருமழையோ, புயலோ, வெள்ளமோ.. - இப்படி ஒரே காரணத்திற்காக நிகழும் மரணங்களைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.

விவசாயிகள் இறக்கிறார்கள், அப்பாவி பொதுஜனம் மழைக் காலங்களில் மின்சாரம் தாக்கி இறக்கிறார்கள்.ஒரே நிலையை நாம் எத்தனை காலம் எதிர்கொள்ளப் போகிறோம்? நம் தவறுகளைத் திருத்திக் கொண்டு, மீண்டும் அவை நிகழாமல் தடுக்க வேண்டாமா?

நாம் என்ன சொல்ல நினைக்கிறோம்? நமது நகரம் இன்னும் சீராகவில்லை, இந்த கஷ்டங்களை எதிர்கொண்டு, இதுபோன்ற காலங்களில் நிகழும் மரணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றா? இது சோகமயமானது, வேண்டாதது.. இதுபோல் இதுவரை பலமுறை நடந்துள்ளது.

இவற்றை நாம் போர்க்கால அடிப்படையில் அணுகாததால், நாம் சென்னையை இது போன்ற பெருமழை, புயல்,வெள்ளத்தை எதிர்கொள்ளும் நிலையில் வைத்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இவர்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வைக்க, நாம் இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்?

இது குற்றம். தவறு அல்ல.. குற்றம்'' என்று விஷால் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x