Last Updated : 25 Nov, 2017 07:43 PM

 

Published : 25 Nov 2017 07:43 PM
Last Updated : 25 Nov 2017 07:43 PM

சிக்கலின்றி வெளிவருமா சசிகுமாரின் கொடிவீரன்?

சசிகுமார் நடிப்பில் தயாராகியுள்ள 'கொடிவீரன்' திரைப்படம் சிக்கலின்றி வெளிவருமா என்ற கேள்வி திரையுலகில் எழுந்துள்ளது.

நவம்பர் 30-ம் தேதி வெளியீடு என்று சசிகுமார் நடிப்பில் உருவான 'கொடிவீரன்' படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனிடையே கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளரான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர் அன்புசெழியன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தனது கடிதத்தில் அவர் எழுதி வைத்திருந்ததால், அது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 'கொடிவீரன்' திரைப்படம் சிக்கலின்றி வெளிவருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பைனான்சியர் அன்புசெழியன் தனக்கு வர வேண்டிய கடன் தொகைக்காக, லேப்பில் 'கொடிவீரன்' படத்தின் மீது நோட்டீஸ் வைத்திருக்கிறார். தற்போது அவரும் தலைமறைவாகியுள்ளதால், யாருடன் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை வெளியிடுவது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், வெளியீட்டு சிக்கல் ஏற்படும் விநியோக ஏரியாவில் 'கொடிவீரன்' படத்தை தயாரிப்பாளர் சங்கமே வெளியிடவும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருக்கிறார்கள். ஆயுதபூஜை வெளியீடு, தீபாவளி வெளியீடு என பலமுறை திட்டமிடப்பட்டு, தற்போது நவம்பர் 30 வெளியீடு என விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ஆனால், டிசம்பர் 8 வெளியிடலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முத்தையா இயக்கத்தில் சசிகுமார், மஹிமா நம்பியார், சனுஷா, விதார்த், பால சரவணன், பூர்ணா மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x