Published : 02 Nov 2017 12:38 PM
Last Updated : 02 Nov 2017 12:38 PM
'பாகுபலி' பாணியில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தை உருவாக்க இயக்குநர் கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் உலகளவில் பெரும் வெற்றியடைந்த படம் 'பாகுபலி'. அவர் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்கினார். இதன் முதல் பாகத்தில் 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்' என்ற கேள்வியோடு முடிந்ததே, 'பாகுபலி' 2-ம் பாகத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.
இதே பாணியில் 'துருவ நட்சத்திரம்' படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார் கவுதம் மேனன். முதல் பாகத்தில் ஒரு கேள்வியோடு முடித்து, தொடர்ச்சியாக 3 பாகங்களை உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தின் வில்லன் யார் என்பதையும் மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது படக்குழு.
விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, பார்த்திபன், ராதிகா, டிடி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். அனைத்து பணிகளையும் முடித்து, அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே தனுஷ் நடித்துவரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும், விரைவில் அதனையும் முடித்து வெளியிடவும் கவுதம் மேனன் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT