Last Updated : 10 Nov, 2017 08:17 PM

 

Published : 10 Nov 2017 08:17 PM
Last Updated : 10 Nov 2017 08:17 PM

ஆண்ட்ரியாவிடம் ஏன் அப்படிப் பேசினீர்கள்?- ஆவேசக் குரல்களுக்கு யூடியூப் சேனலின் விளக்கம்

நடிகை ஆண்ட்ரியாவை பேட்டி கண்டவர் கேள்வி எழுப்பிய விதத்தை முன்வைத்து விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அப்படி என்னதான் அந்த நிருபர் ஆண்ட்ரியாவிடம் பேசியிருப்பார் என யோசிக்கிறீர்களா?

ஆண்ட்ரியாவை அறிமுகப்படுத்தும்போது "நானும் எல்லோரையும் போலத்தான் உங்களை காதலுடனும் இச்சையுடன் பார்த்திருக்கிறேன். இன்று உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்கிறேன்" என்றார். அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை அவர், "பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நீங்கள் சரத்குமாருடன் அவ்வளவு பொருந்தியிருந்தீர்கள்" என்றார்.

இதை சுட்டிக்காட்டித்தான் இணையத்தில் பலரும் அந்த நிருபரை சாடி வருகின்றனர். பெண்ணியவாதிகள் பலரும்.. "ஒரு நடிகையிடம் எத்தகைய கேள்வியை கேட்கக்கூடாது என அந்த நிருபருக்குத் தெரியவில்லை" என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை நடத்துபவர்கள் வெளிப்படையாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பொதுவாக தங்கள் நிருபர்கள் கேட்கும் கேள்வியின் தொனி என்ன? அதை எப்படி சிலர் புரிந்துகொள்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அந்த விளக்க அறிக்கையில் சில பகுதிகள்:

எங்கள் கேள்விகள் எல்லாம் கிண்டலும், நையாண்டியும் கலந்ததாகவே அமைக்கப்படுகின்றன. இத்தகைய கேள்விகளுக்கும் ஆபாசமான கேள்விகளுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. சில நேரங்களில் அதை உணர முடியாமல்போய்விடும்.

உதாரணத்துக்கு 'துப்பறிவாளன்' படத்தைப் பற்றி பேசும்போது அந்தப் படத்தில் இடம்பெற்ற கொலைக்காட்சிகளை சுட்டிக்காட்டி நீங்கள் கொலை செய்வதற்கு அவ்வளவு எல்லாம் மெனக்கெட்டு இருக்க வேண்டாம் சேலை அணிந்துவந்தாலேபோதும்.. எதிராளி செத்துவிடுவார் என்று கூறியிருப்போம்.

இதில், இரண்டாவது பகுதியை மட்டும் பார்த்தால் ஆபாசமான விமர்சனமோ என்று தோன்றும். ஆனால், முழுமையாக வாசித்தால் அந்த ஒப்பீடு புரியும். பெரும்பாலான ஆண்கள் ஆண்ட்ரியாவைப் பார்க்கும்போது எப்படி யோசிப்பார்களோ அந்த புள்ளியில்தான் அந்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

எங்களது கேள்விகள் தவறான தொனியில் ஒலித்திருந்தால் அதற்காக வருந்துகிறோம் ஆனால், எங்கள் கேள்விகளே தவறு என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனிமேல் வெளியிடப்படும் வீடியோக்களில் எங்கள் கேள்விகளின் அர்த்தம் பார்வையாளர்களுக்கு தெளிவாகச் சென்றடையும் விதத்தில் மொழியாக்கங்களை வழங்குகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் அறிய

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x