Last Updated : 16 Nov, 2017 12:43 PM

 

Published : 16 Nov 2017 12:43 PM
Last Updated : 16 Nov 2017 12:43 PM

நவ.17 முதல் திரையிடல் நிறுத்தம்: டிச.15-ல் மீண்டும் நெஞ்சில் துணிவிருந்தால் வெளியாகிறது

நவம்பர் 17-ம் தேதி (நாளை) முதல் திரையிடல் நிறுத்தப்பட்டு, மீண்டும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது 'நெஞ்சில் துணிவிருந்தால்'.

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி வெளியானது.

விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு 'நெஞ்சில் துணிவிருந்தால்' படக்குழு, நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக நீக்கியது.

இந்நிலையில், நவம்பர் 17-ம் தேதி (நாளை) முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரையிடல் நிறுத்தப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து சுசீந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

நவம்பர் 10-ம் தேதி 'நெஞ்சில் துணிவிருந்தால்' வெளியானது. சில தவிர்க்க முடியாத காரணங்களால், இப்படத்தை மறுவெளியீட்டுக்கு திட்டமிடுகிறோம். டிசம்பர் 15-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிட்டு வருகிறோம். இப்படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி

படத்தைப் பார்த்து விமர்சித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சித்தவர்களுக்கும் நன்றி. தவிர்க்க முடியாத காரணத்தால் நாளை(நவம்பர் 17) முதல் தமிழகத்தில் எந்ததொரு திரையரங்குகளிலும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரையிடப்படாது. டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் வெளியாகும்

இவ்வாறு இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 'ஏஞ்சலினா' என்ற பெயரில் புதுமுகங்கள் கொண்டு இயக்கியுள்ள படத்தின் இறுதிக்கட்ட பணிகளை கவனித்து வருகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x