Last Updated : 21 Nov, 2017 01:24 PM

 

Published : 21 Nov 2017 01:24 PM
Last Updated : 21 Nov 2017 01:24 PM

பேசும் படங்கள்: 8-ம் ஆண்டாக ஒன்று கூடிய 80-களின் திரையுலக பிரபலங்கள்

தொடர்ச்சியாக 8-ம் ஆண்டாக 1980-களில் திரையுலக பிரபலங்கள் ஒன்று கூடியுள்ளனர்.

1980-களில் தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி தங்களுடைய நட்பைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர்.

இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதியில் கூடினார்கள். அனைவரும் ஊதா நிற உடையணிந்து கடந்த 17-ம் தேதி காலை அனைவரும் சங்கமமானார்கள். அந்த இடம் முழுவதும் ஊதா நிறப் பூக்கள் உள்ளிட்ட கலை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு இவர்களது கொண்டாட்டங்கள் இரண்டு நாட்களுக்கு நீண்டுள்ளது.

இரவு 7 மணிக்கு அங்குள்ள கூடத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு பிரபலமாக வர, நடிகை சுஹாசினி, லிசி, நடிகர் ராஜ்குமார் சேதுபதி, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குஷ்பு துணையுடன் அனைவரையும் உபசரித்தனர். மும்பை, கேரளா, பெங்களூரு, ஹைதரபாத் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு பிரபலங்கள் வந்திருந்தனர்.

பிறகு ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒட்டுமொத்தமாக 28 திரையுலக பிரபலங்கள் ஊதா வண்ண உடையணிந்து கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் ஒரு அங்கமாக 1960 மற்றும் 70-களில் வெளிவந்து பிரபலமான இந்தி மெல்லிசைப் பாடல்களை ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா சரத்குமார் ஆகியோர் பாடி மகிழ்ந்துள்ளனர். இதில் ரேவதி மற்றும் குஷ்புவுக்கு பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ராம்ப் வாக்கும் நடைபெற்று அதில் சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றது. பாடகர் ஸ்ரீராம், பாலிவுட் புகழ் பூணம், ஜாக்கி ஷ்ரோப், பாக்யராஜ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோர்களின் படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடினார். பின்பு அந்த பாடலின் நிகழ்வுகளை பிரபலங்கள் நினைவுக்கூர்ந்தனர்.

2-ம் நாள் நிகழ்வில் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளை விவாதித்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் அதில் கலந்து கொண்ட 28 பிரபலங்களும் 19-ம் தேதி பிரியா விடை பெற்று தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x