Published : 09 Nov 2017 03:04 PM
Last Updated : 09 Nov 2017 03:04 PM
'இப்படை வெல்லும்' பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாததற்கு படக்குழுவினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் மஞ்சிமா மோகன்.
கவுரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'இப்படை வெல்லும்'. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் மஞ்சிமா மோகன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதில் மஞ்சிமா மோகன் கூறியிருப்பதாவது:
பத்திரிகையாளர் சந்திப்புக்கு வர முடியாததால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் 'குயின்' படத்தின் ரீமேக் படப்பிடிப்புக்காக பிரான்சில் அடுத்த 30 நாட்கள் இருக்கிறேன்.
'இப்படை வெல்லும்' படத்தின் மொத்த குழுவுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். படத்தின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கிய லைகாவுக்கு நன்றி. மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்த இயக்குநர் கவுரவ், உதய், சூரி அண்ணா, ராதிகா மேடம் உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்கும் நன்றி. கடின உழைப்பைத் தந்த தொழில்நுட்பக் குழுவுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் உழைப்பு படத்துக்கு பெரும் பங்காக இருந்தது. தொடர்ந்து என்னை ஆதரித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. நீங்கள் நல்ல படங்களை ஆதரிப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
கடைசியாக, சினிமா பார்க்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். படத்தை திரையரங்குகளில் மட்டும் பாருங்கள். கள்ளத்தனமாக பார்க்காத்தீர்கள். நன்றி
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT