அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை நந்திதா

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை நந்திதா

Published on

நடிகை நந்திதா ‘பைப்ரோமியால்ஜியா’ எனப்படும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘அட்டகத்தி’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ உள்ளிட்டட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபமகாலமாக தமிழில் அவர் பெரிய அளவில் படங்களை நடிப்பதில்லை.

இந்நிலையில் அவர் வினோதமான தசை அழற்சி நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பைப்ரோமியால்ஜியா’ என்ற தசை கோளாறால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இது என் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலை செய்தால் கூட என்னுடைய தசைகளில் இது பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால், அதிக கடினமான வேலைகளையும் உடற்பயிற்சியும் என்னால் செய்ய முடியாது.

சில நேரங்களில் உடனடியாக நகர்வதற்குக் கூட கடினமாக இருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி இருக்கும். மேலும், மோசமாக நினைவாற்றலையும் பாதிக்கும். இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி, என்னுடைய அடுத்தப் படத்துக்காக உழைத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in