Published : 22 Nov 2017 03:57 PM
Last Updated : 22 Nov 2017 03:57 PM
அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.
கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் தன் ட்விட்டர் பதிவில், "அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். 'நான் கடவுள்' நேரத்தில் அன்புசெழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்கு காரணமான அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும்.
மத்திய அரசுக்கும், வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதிப்பணம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு செல்லவும்" என தெரிவித்ததால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
"ஏன் இதை இப்போது தெரிவிக்கிறீர்கள். அன்புவிடம் நீங்களும் கடன் வாங்கியிருக்கிறீர்களா. அஜித்தை வைத்து விளம்பரம் தேடுகிறீர்களா?" என்று சுசீந்திரனைக் குறிப்பிட்டு சிலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த சுசீந்திரன், "அன்புசெழியன் இல்ல யாரிடமும் 1 ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை. விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. அன்புசெழியன் பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT