Last Updated : 22 Nov, 2017 11:58 AM

 

Published : 22 Nov 2017 11:58 AM
Last Updated : 22 Nov 2017 11:58 AM

சினிமா சூதாட்டத்தில் தன்னையே இழந்து விட்டார் அசோக்குமார்: தனஞ்ஜெயன்

 சினிமா சூதாட்டத்தில் தன்னையே இழந்து விட்டார் அசோக்குமார் என்று தனஞ்ஜெயன் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அசோக்குமார் தற்கொலை குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நல்ல மனிதரின் சோகமான முடிவு, துயரம் தருகிறது. சினிமா சூதாட்டத்தில் தன்னையே இழந்து விட்டார். அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x