Published : 22 Nov 2017 12:00 PM
Last Updated : 22 Nov 2017 12:00 PM
ஒட்டுமொத்த திரைத்துறையும் சீரமைக்கபட்ட வேண்டிய தருணம் இது என்று அசோக்குமார் தற்கொலை குறித்து சித்தார்த் தெரிவித்திருக்கிறார்.
திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அசோக்குமார் தற்கொலை குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நிதி நெருக்கடியால் ஓர் இளைஞர் இறந்துள்ளார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ் சினிமா முழுவதுமே இத்தகைய கடனில்தான் தத்தளிக்கிறது. ஆனால், வெளியுலகிற்கு தெரிவதெல்லாம் வெற்றி, புகழ் போன்ற போலி பிம்பங்களே. ஒட்டுமொத்த திரைத்துறையும் சீரமைக்கபட்ட வேண்டிய தருணம் இது.
விவசாயியாக இருந்தாலும் சரி இல்லை சினிமா தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, தற்கொலை என்பது சாபம்.
சசிகுமாருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT