Published : 23 Nov 2017 10:54 AM
Last Updated : 23 Nov 2017 10:54 AM
தமிழக முதல்வராக வர தகுதியானவர்கள் கமல் மற்றும் அஜித் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.
கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அசோக்குமார் தற்கொலை தொடர்பாக அன்புசெழியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுசீந்திரன் தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தார். மேலும் நடிகர் அஜித்தும் அன்புசெழியனால் 'நான் கடவுள்' சமயத்தில் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சினிமா துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு, நான் அளித்த பதில் கமல் சார், அஜித் சார் வந்தா நல்லா இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT