Published : 24 Nov 2017 03:49 PM
Last Updated : 24 Nov 2017 03:49 PM
பைனான்சியர் அன்புசெழியனுக்கு விஜய் ஆண்டனி ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் கிண்டலாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர் அசோக்குமார். அவரது தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பலரும் அன்புசெழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், விஜய் ஆண்டனி ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதனால் சிறுசர்ச்சை உண்டாது.
இந்நிலையில் அன்புசெழியனுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி பேசியுள்ள கருத்தை பகிர்ந்து இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
விஜய் ஆண்டனி... உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!
விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும்..!
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT